Posts

குதிரை முட்டை என்ற தலைப்பில் சிரிக்க வைக்கும் கதை!

Image
  பரமார்த்த குருவும் அவரது முட்டாள் சீடர்களும் எந்தச் செயலைச் செய்தாலும் அதை மற்றவர்கள் கண்டு சிரிப்பார்கள். அப்படி மற்றவர்கள் சிரிப்பதைக் கண்டாலும் தங்களின் முட்டாள் தனத்தை அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. ஒருநாள் பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் நீண்ட நெடும் பயணத்திற்குத் தயாரானார்கள். குருவை எப்பொழுதுமே சீடர்கள் பல்லக்கில் சுமந்து சொல்வார்கள். ஆனால் பரமார்த்த குருவின் உடல் எடை அதிகரித்ததால் பல்லக்கைச் சுமப்பதற்கு சிரமப்பட்டார்கள். சீடர்களில் ஒருவன், "இனிமேல் குருவை நம்மால் சுமந்து செல்ல முடியாது; அதனால் குதிரை ஒன்றை வாங்கி அதன் மேல் குருவை ஏற்றி பயணம் செல்வோம்" என்றான். இதைக் கேட்ட மற்ற சீடர்கள், "அருமையான யோசனை" என்று கூறினர்.  credit: third party image reference குருவிடம் குதிரை வாங்குவது குறித்துக் கேட்டால் அவர் திட்டுவார் என்பதால், பரமார்த்த குருவுக்கு தெரியாமலேயே குதிரை வாங்க திட்டமிட்டனர். அப்பொழுது ஒரு சீடனுக்கு திடீரென சந்தேகம் ஒன்று எழுந்தது. "குதிரை குட்டி போடுமா? முட்டை இடுமா?" என்று கேட்டான். இதைக் கேட்ட மற்ற சீடர்களும் பதில்...